Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

“புனல்சூழ்ந்து வடிந்து போன
நிலத்திலே புதிய நாளை
மனிதப் பைங்கூழ் முளைத்தே
வகுத்தது மனித வாழ்வை
இனிய நற்றமிழே நீதான் எழுப்பினை”

தமிழன் கண்ட கனவுதான்
இந்நாள் வையக் கவின்வாழ்வாய் மலர்ந்தந்ததன்றோ
கவின் வாழ்வாய் மலர்ந்தந்ததன்றோ

பழந்தமிழ் மக்கள் அந்நாள்
பறவைகள் விலங்கு வண்டு
தழை மூங்கில் இசைத்ததைததான்
தழுவியே இசைத்ததாலே எழும் இசைத் தமிழே
இன்பம் எய்தியே குதித்ததாலே
விழி உன்னப் பிறந்த (ஊத்துத்தமிழே / ஊட்டுத்தமிழே / ஊற்றுத்தமிழே)
என் வியப்பின் வைப்பே

“வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும் வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப்பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனிவேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீ உயிர் நான் மறப்பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே
செயலினை மூச்சினை உனக்களித்தேனே
நைந்தாய் எனில் நைந்துபோகும் என்”
“வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்த நன் மனிதராம், புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போல
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி”